20 நாட்களில் கடன் மறுசீரமைப்பு குழு அமைக்கிறது இலங்கை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு: கடனில் இருந்து மீள்வதற்கு, அடுத்த 20 நாட்களில் கடன் மறுசீரமைப்பு குழுவை இலங்கை அமைக்க உள்ளது.

இலங்கை வெளிநாடுகளில் பெற்ற 50 பில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதால் இலங்கை மக்கள் கொதித்தெழுந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.

கடன்களை திருப்பிச் செலுத்தவது தொடர்பாகவும் பொருளாதார நெருக்கடிகளை சரிசெய்யவும் இலங்கை நிதியமைச்சர் அலி சாப்ரி வாஷிங்டனில் ஐ.எம்.எஃப்.(சர்வதேச நாணய நிதியம்) அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அலி சாப்ரி கூறியதாவது: இலங்கை கடனில் இருந்து மீள்வதற்கு அடுத்த 20 நாட்களில் கடன் மறுசீரமைப்பு குழுவை அமைக்கவுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.