அயோத்தி அறக்கட்டளை தலைவர் கவலைக்கிடம் | Dinamalar

லக்னோ: அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ், உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. கோவில் கட்டுவதற்காக மகந்த் நிருத்ய கோபால் தாஸ், ௮௪, தலைமையில், 15 உறுப்பினர்கள் அடங்கிய ‘ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. இந்த அறக்கட்டளை, அயோத்தியில் கோவிலை கட்டி வருகிறது.

இந்நிலையில், அறக்கட்டளையின் தலைவர் நிருத்ய கோபால் தாஸ் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். லக்னோவில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.’அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது’ என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.