சிம்பு
மாநாடு
படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு தற்போது பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்துவருகிறார். கெளதம் மேனன் இயக்கும்
வெந்து தணிந்தது காடு
, கிருஷ்ணா இயக்கத்தில்
பத்து தல
, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.
இதுதவிர பிக் பாஸ் நிகழ்ச்சி, விளம்பரங்கள் என ஒருபக்கம் பிசியாக இருக்கின்றார் சிம்பு. இந்நிலையில் கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
விக்ரம் படத்தில் கெஸ்ட் ரோலில் அவர்கள்? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!
விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்திற்கு முன்பே சிம்பு நடித்த படம் தான் பத்து தல. இப்படத்தில் சிம்புவின் பாதி காட்சிக்கு மேல் படமாக்கப்பட்டது.
சிம்பு உடல் எடை கூடியிருந்தபோது படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது. எனவே வெந்து தணிந்தது காடு படத்திற்காக தன் உடல் எடையை மேலும் குறைத்த சிம்பு பத்து தல படத்திற்காக மீண்டும் உடல் எடையை அதிகரிக்கவுள்ளார்.
பத்து தல படப்பிடிப்பு முடிந்தவுடன் கொரோனா குமார் படத்திற்காக சிம்பு மீண்டும் உடல் எடையை குறைக்கவுள்ளார்.. ப்படி படத்திற்கு படம் உடல் எடையை குறைத்து மற்றும் அதிகரித்து வரும் சிம்புவை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.