உக்ரைனில் குளிரான அடித்தளத்தில் பதுங்கியிருந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! மனதை ரணமாக்கும் புகைப்படங்கள்



உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் அரங்கேற்றும் கொடூரத்தால் ஏற்பட்ட இழப்பை விளக்கும் புகைப்படங்கள் வெளியாகி மனதை உருக்கியுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சண்டை கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி தொடங்கியது.
60 நாட்களை தாண்டி போரானது நடந்து வருகிறது, இந்த தாக்குதலில் உக்ரைனில் வாழும் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்களை இழந்து உறவுகள் தவிக்கும் காட்சிகள் அவ்வபோது வெளிவருகின்றன.
அந்த வகையில் உயிரிழந்த இளம் தாயார் உடலை அவர் கணவர் புதைப்பதும், அதை அருகிலிருந்து தம்பதியின் 10 வயது மகன் பார்க்கும் புகைப்படமும் வெளியாகி மனதை கலங்கடித்துள்ளது.

போரை முடித்து கொள்ளலாம்! இதுக்கு தயாரா இருக்கேன்… ரஷ்யாவிடம் இறங்கிவந்த ஜெலன்ஸ்கி

அதன்படி மரினா என்ற பெண் தனது கணவர் மற்றும் 10 வயதான மகன் வோவாவுடன் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குளிரான அடித்தளத்தில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில் இளம்தாயார் சமீபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரின் சடலத்தை வோவோ முன்னிலையில் கணவர் அடக்கம் செய்தார்.
இதை கண் அசைக்காமல் சோகமான முகத்துடன் அவன் பார்த்தான், மேலும் சடலத்தை பிணவறையில் இருந்து எடுத்து வரவும் அவன் சென்றான், அங்குள்ள கதவுக்கு அருகே தாயின் சடலத்தையும் காண அவன் காத்திருந்தான்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.