சென்னை: நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் நிபந்தனைகள் தளர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. திங்கட்கிழமை தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த கோரிய ஜெயக்குமாரின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என ஜெயக்குமாருக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார்.