அறநிலையத் துறைக்கு 4 தளங்களுடன் புதிய கட்டிடம்: பூமி பூஜையில் ஸ்டாலின் பங்கேற்பு

Stalin attends HRCE building bhoomi pooja: தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டப்படவுள்ள புதிய கட்டிடங்களின் பூமி பூஜை நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் கலந்துக் கொண்டார்.

சென்னை நுங்கம்பாக்கம் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், ரூ.15 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இந்த கட்டிடம் 39,913 சதுர அடியில் 4 தளங்களுடன் அமையவுள்ளது. இந்த கட்டிடத்தில், கோயில்களின் புத்தக விற்பனை நிலையம், வரவேற்பறை, உதவி ஆணையர் அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை, அலுவலர்கள் அறை, பொறியாளர்கள் அறை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.

இந்த கட்டிடங்களை கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் கட்டிடத்தின் மாதிரியை பார்வையிட்டார்.

இதையும் படியுங்கள்: திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பனை பொருள்கள் விற்பனை கண்காட்சி

அதன் பின் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் 5 வருடங்களுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு பணி வரன் முறை செய்யப்பட்டதற்கான ஆணையை முதலமைச்சர் வழங்கினார். முன்னதாக தமிழக சட்டப்பேரவையில், 5 ஆண்டுகளுக்கு மேலாக திருக்கோயிகளில் பணியாற்றி வரும் பூசாரிகள், பட்டாச்சாரியர்கள், ஓதுவார்கள், காவலர்கள், அலுவலக உதவியாளர், உள்ளிட்ட 1500 மேற்பட்டோருக்கு பணி வரன் முறை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. அவர்களில் முதற்கட்டமாக 425 பேருக்கு பணி வரன் முறை செய்யப்பட்டுள்ளது. அதில் 33 பேருக்கு முதலமைச்சர் இன்று பணி வரன் முறை ஆணையை வழங்கினார்.

இந்தநிகழ்வில், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தயாநிதி மாறன் எம்.பி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபன் உள்ளிடோர் கலந்துக் கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.