சுவிட்சர்லாந்துக்கு அகதிகளாக வந்துள்ள உக்ரைனியர்கள், மீண்டும் உக்ரைனுக்கே திரும்பத் துவங்கியுள்ளதாக சுவிஸ் மாகாண புலம்பெயர்தல் செயலரான Christine Schraner தெரிவித்துள்ளார்.
இதுவரை சுவிட்சர்லாந்து சுமார் 40,000 உக்ரைன் அகதிகளுக்கு இடமளித்துள்ளது.
ஆனால், உக்ரைனியர்களில் சிலர், டான்பாஸ் பகுதியைச் சுற்றி மட்டுமே ரஷ்யப் படையினர் அதிக கவனம் செலுத்துவதால், உக்ரைனின் சில பகுதிகள் பாதுகாப்பானவையாக ஆகியுள்ளதாக நம்புகிறார்கள்.
உக்ரைன் போலந்து எல்லையில் இருக்கும் போலந்து நாட்டு பொலிசார், சென்ற வாரம், உக்ரைனிலிருந்து மக்கள் வெளியேறுவது குறையத் துவங்கியதாகவும், இப்போதோ, உக்ரைனிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கையைவிட, உக்ரைனுக்குத் திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
உலகம் முழுவதிலுமிருந்து இதுவரை 600,000 உக்ரைனியர்கள் மீண்டும் சொந்த நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான உயர் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.