விகடனின் ‘Doubt of common man’ பக்கத்தில் வாசகர் ஒருவர் ,” தொலைதூரக் கல்வி முறையில் சட்டம் படிப்பதற்கான வாய்ப்பு உள்ளதா? இல்ல எனில் சட்டம் தொடர்பான வேறென்ன படிப்புகள் உள்ளன? ” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவரது கேள்விக்கான பதிரை இந்தக் கட்டுரையில் காண்போம்.
வாசகரின் கேள்விக்கு விளக்கமாக பதிலளிக்கிறார் கல்வியாளர் ராஜராஜன் “ தொலைதூரக் கல்வியில் சட்டம் படிக்க BGL என்ற கோர்ஸ் உள்ளது. ஆனால் சட்டப் படிப்பு ஒரு தொழில் முறைக் கல்வி. இதனால் தொலைதூரக் கல்வியில் படிக்கும் இந்த கோர்ஸை வைத்துக்கொண்டு வழக்கறிஞராக பயிற்சி பெறுவது என்பது இயலாது. எனவே, வழக்கறிஞர்களாக பயிற்சி பெற விரும்புவோர் சட்டப் படிப்பை முறையான நேரடியாக கல்லூரியின் கல்வி மூலமே படித்திருக்க வேண்டும்.
இதேபோல தொலைத்தூரக் கல்வியில் சட்டம் படிக்க பல்கலைகழகங்கள் பலவும் பல்வேறு டிப்ளமோ கோர்ஸ்களை வழங்குகின்றன. உதாரணத்திற்கு B.com in commercial rights என்ற படிப்பு உண்டு. ஆனால் முன்பு சொன்னதைப்போல இதை வைத்துக்கொண்டு பயிற்சி பெறுவது என்பது முடியாது. அந்த குறிப்பிட்ட பாடம் சார்ந்து நம் அறிவை வளர்ந்துக் கொள்ளவே இந்தப் பாடங்கள் பயன்படும்.
இப்போது சட்டப் படிப்பு குறித்தான சில அடிப்படைத் தகவல்களை கூறுகிறேன். நம் நாட்டில் மொத்தம் 21 தேசிய சட்டப் பல்கலைகழகங்கள் உள்ளன. அவை அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன. தமிழ்நாட்டில் இப்பல்கலைக்கழகம் திருச்சியில் உள்ளது. CLAT எனப்படும் Common Law Admission Test தான் இதில் சேர்வதற்கான தகுதித் தேர்வு. அதேபோல டெல்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் சேர AILET ( All India Law Entrance Test) என்ற தேர்வு நடத்தப்படுகிறது.
நுழைவுத் தேர்வுகள் இல்லாமல் சட்டம் படிப்பதற்கு அந்தந்த மாநிலங்களுக்கு கீழ் வரும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. உதாரணத்திற்கு நம் மாநிலத்தில் Dr.MGR சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் இருந்தாலே போதுமானது. அதேபோல 12-ம் வகுப்பில் குறிப்பிட்ட பிரிவில் உள்ள மாணவர்கள் மட்டும் சட்டம் படிக்க முடியும் என்ற எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். சட்டம் சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பவர்கள் சட்டம் படிக்க மாலை கல்லாரியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது Sabbatical leave என்று சொல்லக்கூடிய கற்றல் விடுப்பு எடுத்து படிக்கலாம்” என்று கூறினார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!
இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!