’பட்டியலினத்தவர் அரசு உயர் பதவியில் இருக்கக் காரணம் பெரியார் போட்ட விதைதான்’ – சிவக்குமார்

பட்டியலின மக்கள் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஆசிரியர், மருத்துவர் உட்பட அனைத்து துறைகளிலும் புற்றீசல் போல பணியில் இருப்பதற்கு, தந்தை பெரியார் போட்ட விதைதான் காரணம் என நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில், சமீபத்தில் தமிழக அரசு விருது பெற்ற செந்தலை ந.கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது சூலூருக்கும், சுயமரியாதை கொள்கைக்கும் நிறைய தொடர்பு உண்டு எனவும், தந்தை பெரியார் கடவுள் மறுப்பை பேசினாரே தவிர, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவமரியாதை செய்தது இல்லை எனவும் சிவக்குமார் தெரிவித்தார். குன்றக்குடி அடிகளார் இருக்கையில் அமர்ந்திருந்தபோது அவருக்கு இணையாக உட்கார மறுத்தவர் அவர் எனவும் சிவக்குமார் தெரிவித்தார். ஆதிக்க சக்திகளை தான் அவர் வெறுத்தார் என்றும், பிராமணீயத்தை தான் அவர் வெறுத்தார், பிராமணர்களை வெறுக்கவில்லை எனவும் சிவக்குமார் பேசினார்.

image

இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், மருத்துவர், இன்ஜீனியர், வழக்கறிஞர் உட்பட உட்பட அனைத்து துறைகளிலும் புற்றீசல் போல பணியில் இருப்பதற்கு காரணம், அன்று தந்தை பெரியார் போட்ட விதைதான் எனவும் சிவக்குமார் தெரிவித்தார். காலங்கள் கூட கூட பெரியார் மீது மரியாதை கூடிக் கொண்டே செல்கின்றது எனவும், அவர் மீது விமர்சனர்களும் வந்து கொண்டு இருக்கின்றது எனவும் சிவக்குமார் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.