பூமியில் இருந்து சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணை சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதன் முறையாக சுற்றுலா சென்ற பயணிகள் பயணத்தை முடித்து பூமி திரும்புகின்றனர்.
அமெரிக்காவின் ஆக்ஸியாம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற 4 பேர்,சுமார் 2 வார கால பயணத்தை முடித்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் சென்ற விண்கலம் அவர்களை ஏற்றிக்கொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூமியை நோக்கி 16 மணி நேர பயணத்தை தொடங்கியுள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் அவர்களது கேப்சியூல் வந்து இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.