தலைநகரில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில மாதங்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஜீரோ கோவிட் பாலிசியை சீன அரசு கடைபிடித்து வருவதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஷாங்காய்
, சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா பரவல் தற்போது கோரத் தாண்டவமாடி வருகிறது.
இந்நிலையில், தலைநகர் பீஜிங்கில், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. சுமார் 2.1 கோடி மக்கள் வசிக்கும்
பீஜிங்
நகரில், வெறும் 40 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், நகரம் முழுவதும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.
மீண்டும் முழு ஊரடங்கு – பிரதமர் எடுக்கப் போகும் அதிரடி முடிவு?
பீஜிங்கில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில், கொரோனா அச்சம் காரணமாக, பொது மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற பயம் காரணமாக, அத்தியாவசியப் பொருட்களை அவர்கள் வாங்கிக் குவித்து வருகின்றனர். ஆனால் முழு ஊரடங்கு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.