பனிக்கட்டிகளுக்கு கீழே 295 அடி தூரத்துக்கு நீச்சல் அடித்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், பனிக்கட்டிகளுக்கு அடியில் 295 அடி 3 இன்ச் தூரம் நீச்சலடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அம்பெர் ஃபிலாரி (Amber Fillary) நீச்சலில் அதீத ஆர்வம் கொண்டவர். இவர் தற்போது இரண்டாவது முறையாக நீச்சலில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பனிக்கட்டிகளுக்கு அடியில் 295 அடி 3 இன்ச் தூரம் நீச்சல் அடித்து சாதனை புரிந்துள்ள இவர், இரண்டு வருடங்களுக்கு முன் நார்வேவில் 229 அடி 7.9 இன்ச் தூரம் நீச்சல் அடித்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார்.

பனிக்கட்டிகளுக்கு அடியில் அவர் நீச்சல் அடிக்கும்போது துடுப்புகளையோ அல்லது டைவிங் சூட்-டையோ எதுவும் பயன்படுத்தவில்லை என்பது தான் இப்போதைய சாதனையை கூடுதல் சிறப்பு. இது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

மேலும், இவர் பேட்டியளித்த போது, ”சிறு வயதில் இருந்தே நீச்சலடிப்பது மிகவும் பிடிக்கும். ஃபிக் ப்ளூ படம் பார்த்த பிறகு ஃப்ரீ டைவிங் மீது ஆர்வம் அதிகமானது. அதன்பிறகு தான் இதைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். இப்படித்தான் தொடங்கியது என் பயணம். கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன். தற்போது அதிலிருந்தும் மீண்டு வந்துள்ளேன்” என்றார். இவர் மோட்டிவேஷனல் ஸ்பீக்கராவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.