புதுச்சேரி, :புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் 131 பேர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 182 பேர் பணிபுரிந்து வருகின்றனர். பொறியியல் கல்லுாரியாக இருந்தபோது அனைவருக்கும் மாத ஊதியம் காலதாமதமில்லாமல் வழங்கப்பட்டது.தற்போது, தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்ற பின், மாத ஊதியம் சரிவர வழங்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிப் பலன்களையும் வழங்கவில்லை.கடந்த மார்ச் மாத ஊதியம் இன்று வரை ஆசிரியர், ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, முதல்வர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் இந்த பிரச்னையில் தலையிட்டு, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடைய நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி, :புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் 131 பேர், ஆசிரியர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.