மாஸ் பேச்சு, திடமான முடிவுகள் என டெஸ்லா நிறுவனர்
எலான் மஸ்க்
எப்போதும் ஊடகத்திற்கு ஹாட் டாப்பிக்காகத் தான் வலம் வருவார். சமீபத்தில், பிரபல மைக்ரோ புளாகிங் தளமான ட்விட்டரை குறித்து சரமாரியான விமர்சனங்களை எலான் மஸ்க் தனது
ட்விட்டர்
பக்கத்திலேயே முன்வைத்தார்.
இதற்கு சிலர் பதிலளிக்க, புதிய சமூக வலைத்தளத்தை எலான் மஸ்க் தொடங்கப் போவதாகப் பேச்சுகள் அடிபட்டது. ஒருபுறம் அனைவரும் மஸ்கின் புதிய சமூக வலைத்தளத்தின் சுவையை அறிய காத்திருந்த வேளையில், கணிசமான ட்விட்டர் பங்குகளை வாங்கி அனைவருக்கும் ஷாக் கொடுதார் டெஸ்லா நிறுவனர்.
புதிய தொடக்கம் குறித்து எந்த தயக்கமும் இல்லாமல் அகண்ட கால் வைக்கும் மஸ்க், இந்த விஷயத்தில் யாரும் எதிர்பார்த்திராத முடிவுகளை எடுத்தார். இப்போது, மொத்த ட்விட்டர் நிறுவனத்தையும் சொந்தமாக்கி உள்ளார். அதற்கு கொடுத்த விலையும் உங்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும்.
கழிப்பறையை விட போனில் அதிகளவு கிருமிகள் – இன்பினிக்ஸ் Smart 6 அளித்த தீர்வு!
ட்விட்டரை வாங்கிய மஸ்க்
ஏப்ரல் 25, 2022 அன்று ட்விட்டர் தலைமை, எலான் மஸ்க் உடன் ஒப்பந்தம் செய்துகொண்டதை உறுதிப்படுத்தியது. உலகின் மிகப் பெரிய பணக்காரர் அடிப்படையில் ட்விட்டரை $44 பில்லியன் டாலர் எனும் அதிகத் தொகைக் கொடுத்து எலான் மஸ்க் வாங்கி உள்ளார்.
உங்களுக்கு இந்த கணக்கு புரியாது என்று நினைக்கிறேன். இந்திய மதிப்பில் சொல்லப்போனால், 33 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை கொடுத்து ட்விட்டர் நிறுவனம் வாங்கப்பட்டுள்ளது. டெக் துறையில் சமீப காலங்களில் நடந்த மிகப்பெரிய பரிமாற்றம் இது என்று கூறப்படுகிறது.
எலான் மஸ்க் அடிப்படையில் ட்விட்டரின் ஒவ்வொரு பங்குக்கும் $54.20 டாலர் எனும் ஈர்க்கக்கூடிய தொகையை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில், ஊழியர்கள் கையில் இருக்கும் ஒரு பங்கிற்கு ரூ.4,149 அளிக்கப்படும். ஆனால், அவர்கள் தொடர்ந்து பணியாற்றினால், பங்குகள் அவர்கள் கணக்கிலேயே வரவு வைக்கப்படும்.
பில் கேட்ஸை சீண்டிய எலான் மஸ்க் – வைரலாகும் புகைப்படம்!
ட்விட்டரை மேம்படுத்த மஸ்க் திட்டம்
ட்விட்டரை வாங்கிய 33 லட்சம் கோடி ரூபாயில் பாதியை கடனாக பெற்று எலான் மஸ்க் வழங்குவதாகக் கூறப்படுகிறது. மீதமிருக்கும் தொகையை தனது சொந்த மூலதனத்தின் மூலம் அவர் செலுத்துவார் என்று தெரிகிறது. சொந்த மூலதனம் என்பது, எலான் மஸ்க் என்ற தனிநபர் பெயரில் இருக்கும் பணமோ அல்லது சொத்துகளோ என எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
மேற்கூறியபடி, ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டவுடன், நிறுவனம் அதன் பங்குகளை பங்குச் சந்தையில் வழங்காது. இனி இந்த சமூக ஊடகங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க எலான் மஸ்க் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பார்.
“புதிய அம்சங்களுடன் தயாரிப்பை மேம்படுத்துவதன் மூலம் மக்களிடத்தில் நம்பிக்கையை அதிகரிக்க முடியும். ஸ்பாம்போட்களை களை எடுப்பதன் மூலமும், ஓபன் சோர்ஸ் அல்காரிதங்களை உருவாக்குவதன் வாயிலாகவும் ட்விட்டரை மேம்படுத்த விரும்புகிறேன்” என தனது அறிக்கையில் டெஸ்லா தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்த விவரங்களின்படி, பங்குதாரர்கள் ஒவ்வொரு பங்கிற்கும் சுமார் $54.20 டாலர் பணத்தைப் பெறுவார்கள். அது அடிப்படையில் ஏப்ரல் 1 அன்று ட்விட்டரின் மதிப்பை விட 38% விழுக்காடு கூடுதல் தொகையாகும். அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ட்விட்டரின் பங்குகள் 6% விழுக்காடு அளவு வர்த்தகத்தில் உயர்ந்தன.
சிம் கார்டு தேவையில்லை – அவசர காலத்தில் உதவ வரும் ஐபோன் 14!
ட்விட்டர் பராக் அகர்வாலுக்கு கிடைக்கும் வெகுமதி
முன்னதாக, ட்விட்டரை விமரிசித்து வந்த எலான் மஸ்க், அதன் தலைமை மீது கடும் அதிருப்தியைத் தெரிவித்திருந்தார். இப்படி இருக்கும் சூழலில், ட்விட்டர் தலைமையை மாற்றி அமைத்தால், தற்போது நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக இருக்கும் பராக் அகர்வாலுக்கு என்னென்ன சன்மானங்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இதுகுறித்து Equilar எனும் பகுப்பாய்வு நிறுவனம் சில முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அவர் தற்போது இருக்கும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டால், அவருக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுக்கப்படும். இந்த தொகை அவர் வைத்திருக்கும் ட்விட்டர் பங்குகளின் பதிப்பைப் பொருத்தது.
இன்றைய டாலர் மதிப்பீட்டின் கணக்குபடி, இந்திய மதிப்பில் இது சுமார் 321 கோடியே, 56 லட்சத்து, 35 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இதே 2021 காலகட்டத்தில் இவரது ட்விட்டர் பங்கின் மதிப்பு 30.4 மில்லியன் தான் என்பது நினைவுகூரத்தக்கது.