திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அதிமுக கழக அமைப்பு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் போது இருத்தரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
ஆங்கரை ஊராட்சியில் உள்ள திருமண மண்டபத்தில் திருச்சி புறநகர் மாவட்ட, தெற்கு மாவட்ட செயலாளர், மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
அப்போது தற்போதைய மாவட்ட செயலாளரை எதிர்த்து அம்மா பேரவையை சேர்ந்த நபர் வேட்பு மனு தாக்கல் செய்ய முற்பட்டதால் இருத்தரப்பினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு நாற்காலிகளை தூக்கி எரிந்து ரகளையில் ஈடுபட்டனர்.