ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும் வாங்க முன்வந்தார். ஒரு பங்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.
ட்விட்டர் நிறுவனம் கைமாறவுள்ள நிலையில் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால், ஊழியர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், நிர்வாகம் முழுமையாகக் கைமாற 6 மாதங்கள் வரை ஆகலாம் எனவும், ’இப்போது’ வரை யாரும் வேலை நீக்கம் செய்யப்படுவதற்கான சூழல் ஏற்படவில்லை எனவும் கூறினார். நிறுவனம் முழுமையாகக் கைமாறிய பின் அது எந்த திசையில் செல்லும் என்பது தெரியாது எனக் குறிப்பிட்ட பராக் அகர்வால், ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது எனவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | எலோன் மஸ்க் வசம் செல்லும் ட்விட்டர்; மஸ்க் பதிவு செய்த முதல் ட்வீட்
விரைவில் எலான் மஸ்க் ட்விட்டர் ஊழியர்களுடன் கேள்வி-பதில் அமர்வில் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டரின் நிர்வாகம் கைமாறும் வரை பராக் அகர்வாலே தலைமைச் செயல் அதிகாரியாக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அதற்கு முன்னதாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டால் நிறுவன விதிகளின்படி அவருக்கு 42 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் என ஈக்விலார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த கருத்து குறித்து பதிலளிக்க ட்விட்டர் நிறுவனம் மறுத்துள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரின் 9.2% பங்குகளை வாங்கியபோதிலிருந்தே ட்விட்டர் ஊழியர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். எலான் மஸ்க்குடன் ட்விட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பல ஊழியர்கள் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்தனர். ஒரு மாதத்திற்குள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள திருப்பங்களால் ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் படிக்க | Elon Musk – Twitter: டிவிட்டரை மொத்தமாக வாங்க தயாராகும் எலான் மஸ்க்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G