எலான் மஸ்க் வழக்கம் போல் தனது அதிரடியான நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளால் டிவிட்டர் நிறுவனத்தைச் சுமார் 44 பில்லியன் டாலர் தொகைக்குக் கைப்பற்ற ஒப்புதல் பெற்றுள்ளார். ஆனால் உண்மையான பிரச்சனை இங்கு தான் துவங்குகிறது.
லட்சாதிபதியாக அதானி கொடுத்த வாய்ப்பு.. ஆனால் எச்சரிக்கையா இருங்க.. ட்விஸ்ட் வைக்கும் நிபுணர்கள்!
டிவிட்டர் கைப்பற்றல்
டிவிட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனமோ அல்லது எலான் மஸ்க்கிடம் இருக்கும் டெஸ்லா பங்குகளுக்குப் பதிலாக டிவிட்டரை கைப்பற்றினால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் டிவிட்டர் நிறுவனத்தைப் பணமாகக் கொடுத்து எலான் மஸ்க் வாங்குவதாக அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
ஆனால் எலான் மஸ்க்கிடம் தற்போது வெறும் 3 பில்லியன் டாலர் அளவிலான தொகை மட்டுமே உள்ளது. ஆனால் டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற வேண்டும் என்றால் 44 பில்லியன் டாலர் வேண்டும். இதை எப்படிச் செய்யப் போகிறார் என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.
பண நெருக்கடி
எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தின் பெயரில் 13 பில்லியன் டாலர் வங்கிக் கடன் மற்றும் தன்னிடம் இருக்கும் 170 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளின் சிறு பகுதியை விற்பனை செய்து 12.5 பில்லியன் டாலர் நிதி திரட்ட உள்ளதாக அறிவித்தாலும், சுமார் 21 பில்லியன் டாலர் தொகை தேவை. இந்தப் பணத்திற்கு எலான் மஸ்க் என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கும் போது 3 வழிகள் உள்ளது.
முதல் வழி – முதலீட்டாளர்கள்
எலான் மஸ்க்-ன் எண்ணத்திற்கு இணங்கும் பழைய அல்லது புதிய முதலீட்டாளர்கள் உடன் இணைந்து டிவிட்டர் பங்குகளைக் கைப்பற்றுவது. இந்த முதலீட்டாளர்கள் தனிநபர் முதலீட்டாளர்களாகவும் இருக்கலாம் அல்லது நிறுவன முதலீட்டாளர்களாகவும் இருக்கலாம். இதற்காகப் பேச்சுவார்த்தையை ஏற்கனவே துவங்கியுள்ளார் எலான் மஸ்க்.
அப்படிப் பார்க்கும் போது டிவிட்டர் நிறுவனத்தின் பங்குகளை ஜாக் டோர்சி விற்பனை செய்ய வாய்ப்பு இல்லை.
2வது வழி – பங்கு விற்பனை
எலான் மஸ்க் ஏற்கனவே டெஸ்லா பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திரட்டும் நிலையில், போதுமான பணம் இல்லாத காரணத்தால், இதுவரையில் வெளிச் சந்தையில் முதலீட்டைப் பெரிய அளவில் திரட்டாத ஸ்பேஸ் எக்ஸ், போரிக் கம்பெனி, நியூராலிங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து இதன் மூலம் டிவிட்டரைக் கைப்பற்றுவதற்கான பணத்தைத் திரட்டுவது தான்.
கிரிப்டோ
எலான் மஸ்க்கிடம் பிற பணக்காரர்கள் போல் ஆடம்பர வீடு, ஆடம்பர சொத்துக்கள், அதிக எண்ணிக்கையிலான ஆடம்பர கார்கள் இல்லை. இதனால் தன்னிடம் இருக்கும் பிற சொத்துக்களைத் தான் பணமாக்க முடியும், நிறுவனப் பங்குகளைத் தாண்டி எலான் மஸ்க்கிடம் இருக்கும் முக்கியமான சொத்துக்களாக விளங்குவது கிரிப்டோகரன்சி. எலான் மஸ்க் பிட்காயின், எதிரியம், டோஜ்காயின் ஆகிய கிரிப்டோகரன்சிகள் உள்ளது. இதை விற்பனை செய்வதன் மூலம் அதிகப்படியான பணத்தைத் திரட்ட முடியும்.
மஸ்க் திட்டம் என்ன
இந்த 3 வழிகளில் முதல் வழி அதாவது முதலீட்டாளர்கள் கூட்டணியில் டிவிட்டரை வாங்குவது தான் சிறந்த வாய்ப்பாக இருக்கும். ஆனால் எலான் மஸ்க்-ன் திட்டம் என்ன என்பது இதுவரை முழுமையாகத் தெரியவில்லை.
தாமதம் இருக்கும், தோல்வி இருக்காது..
எது எப்படி இருந்தாலும் டிவிட்டர் புதிய உச்சத்திற்குச் செல்வது உறுதி என்பதால் முதலீட்டாளர்கள் ஆர்வமாக முதலீடு செய்ய வாய்ப்புகள் அதிகம். இதனால் டிவிட்டரை முழுமையாகக் கைப்பற்றுவதில் தாமதம் இருந்தாலும், தோல்வி இருக்காது என உறுதியாகக் கூற முடியும்.
Elon Musk struggling for cash to acquire Twitter; 3 ways elon can get money
Elon Musk struggling for cash to acquire Twitter; 3 ways elon can get money பணத்திற்குப் போராடும் எலான் மஸ்க்.. டிவிட்டரை முழுமையாகக் கைப்பற்ற முடியுமா..? சந்தேகம் தான்..?!