'அவரால்' என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிட்டது… கதறும் தயாரிப்பாளரின் மகள்!

திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் கணேசன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில்
விமல்
நடிப்பில்
மன்னர் வகையறா
என்ற படத்தை தயாரித்தார் கணேசன். இதற்காக 1.73 கோடி ரூபாய் பணத்தை கணேசன் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

செலவு செய்த பணத்தை தருவதாக உறுதி அளித்த விமல் பணத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கடன் வாங்கியவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வந்த கணேசன் அந்த மன உளைச்சலிலேயே மரணமடைந்து விட்டார்.

அப்பா அக்காவ கண்டிச்சு வைங்க… ரஜினியிடம் கண்கலங்கிய சவுந்தர்யா… வெடித்த புதிய பிரச்சனை!

இந்நிலையில் அவரது மகள் ஹேமலதா, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர்
விமல் மீது புகார்
அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் விமலை நம்பி 1.73 கோடி ரூபாயை இழந்ததால் தனது தந்தை இறந்துவிட்டதாகவும் தனது தாயும் தற்போது உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாகிவிட்டதாகவும் கதறியுள்ளார்.

Nayanthara: ‘அவருடனான’ எக்ஸ் காதலை படமாக்கிய விக்னேஷ் சிவன்… பிரேக் அப் முடிவில் நயன்?

மேலும் தனக்கு திருமணம் ஆகாத ஒரு தங்கை இருப்பதாகவும் விமலை நம்பியதால் தற்போது தங்களின் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிட்டதாகவும் கண்ணீர்மல்க கூறினார். மேலும் பட விநியோகஸ்தர் சிங்காரவேலன், தயாரிபப்பாளர்கள் கோபி, கங்காதரன் ஆகியோரும் நடிகர் விமல் மீது புகார் அளித்துள்ளனர். இதனிடையே தன் மீதான புகார் குறித்து நடிகர் விமல் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விளக்கம் அளித்தார்.

இது பெண்களின் காலம்; ஆண்களே ஜாக்கிரதை; நாசர் கல.. கல.. பேச்சு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.