தமிழக சட்டமன்ற மசோதாவுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வரவேற்பு

University Teacher’s Association welcomes bill for TN Govt to appoint VC’s: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள தமிழக அரசின் மசோதாவை பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுனர் வசம் இருந்து வருகிறது. இதனிடையே தமிழக அரசுக்கும் ஆளுனருக்கும் இடையில் பல்வேறு விவகாரங்களில் மோதல்போக்கு இருந்து வரும் நிலையில், துணைவேந்தர்களை நியமனம் செய்வதிலும், முரண்பாடுகள் இருந்தது.

இந்தநிலையில் நேற்று, தமிழக அரசின் 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.

இதையும் படியுங்கள்: தமிழ்நாட்டின் 3 விவசாய பொருட்கள் புவிசார் குறியீட்டுக்கு விண்ணப்பம்; எவை தெரியுமா?

இந்த மசோதாவை பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இந்த மசோதா உயர்கல்வித் துறையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் மற்றும் இரட்டை அதிகார மையங்களுக்கு முடிவு கட்டும். மாநில உயர்கல்வி அமைச்சரைப் புறக்கணித்துவிட்டு, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு வேந்தராக இருக்கும் ஆளுநர் அவராக அழைப்பு விடுத்திருந்தது, மாநில அரசின் கல்விக் கொள்கைக்கு எதிரானது என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், இதுபோன்ற செயல்கள் உயர்கல்வித் துறையில் தேக்க நிலையையே ஏற்படுத்தும். ஆளுநர் துணைவேந்தர்களை நியமித்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.