உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக சிமெண்ட் விலை ஒரு மாதத்தில் 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சிமெண்ட் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பது போன்ற காரணங்களால் ஏப்ரல் மாதத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு 45 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை இந்த மாதத்தில்தான் சிமெண்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. உற்பத்திச் செலவுகள் அதிகரித்ததால் ஒரு மூட்டை சிமெண்ட் உற்பத்தி செய்ய 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை செலவு அதிகரித்துள்ளதாக முன்னணி சிமென்ட் தயாரிக்கும் நிறுவனங்கள் கூறுகின்றன.
வட இந்தியாவில் சிமெண்ட் விலை 14 சதவிகிதம் அதிகரித்து ஒரு மூட்டை 431 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் சிமெண்ட் விலை 8 முதல் 10 சதவிகிதம் அதிகரித்து ஒரு மூட்டை 400 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதேபோல, மேற்கிந்திய பகுதிகளில்12 சதவிகிதமும், கிழக்கிந்திய பகுதிகளில் 14 சதவிகிதம் வரையும் சிமெண்ட் விலை அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு போல, சிமெண்ட் விலை அதிகரித்து வருவதால் பரவலாக நாடு முழுவதும் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டுமானங்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: `தொடரும் மின்வெட்டுக்கு காரணமென்ன?’- கேள்விகேட்கும் தோனியின் மனைவி சாக்ஷிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM