உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலை மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் உதவியாளர் அலெக்சி தெரிவித்துள்ளார்.
அந்த எஃகு ஆலைக்கு மேலாக கரும் புகைமூட்டம் எழுந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
அப்பகுதியில் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியை பணியாளர்கள் மேற்கொண்டனர்.
வீதிகளில் கார்கள் எரிந்த நிலையில் இருந்தன. இதற்கு மத்தியில் பொதுமக்கள் நடமாட்டம் காணப்பட்டது.