புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகேஷ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததால், பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. தற்போது, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில், டில்லிக்கு சென்றுவிட்டு சமீபத்தில் புதுச்சேரிக்கு திரும்பிய ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குனர் ராகேஷ் அகர்வாலுக்கு, கடந்த 23ம் தேதி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும், ஜிப்மரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
கடந்த சில வாரமாக, புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் பூஜ்யமாக இருந்த சூழ்நிலையில், சில நாட்களாக கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. அடுத்த சில வாரங்களில் புதுச்சேரியில் தொற்று பரவல் அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளதால், ஜிப்மரில் கொரோனா சிகிச்சை மையம் மீண்டும் திறக்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement