கன்னடத் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பிறந்தநாள் நிகழ்ச்சி பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல தமிழ் நடிகை லட்சுமிக்கு
ராஜ்குமார்
வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பழம்பெரும் நடிகை
லட்சுமி
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். 1961ஆம் ஆண்டு ஸ்ரீ வள்ளி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். பின்னர்
ஜீவனாம்சம்
என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக மாறினார்.
திருமணம் பற்றி பேசிய ரம்யா பாண்டியன்..!கடைசில இப்படி சொல்லிட்டாங்களே ?
இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ஹிட் கொடுத்துள்ளன. எம்ஜிஆர்,
சிவாஜி கணேசன்
, சிவகுமார், ஜெமினி கணேசன் என பல்வேறு முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார் லட்சுமி.
பின்னர் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் அறிமுகமான லட்சுமிக்கு ‘
திக்கற்ற பார்வதி
‘ என்னும் படத்திற்காக சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது.
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்
‘
சில நேரங்களில் சில மனிதர்கள்
‘ படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படத்திற்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் மீண்டும்
உண்மைகள்
என்ற படத்திற்காக சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது உள்ளிட்ட விருதுகளால் கௌரவிக்கப்பட்டார் லட்சுமி.
மலையாளத் திரையுலகிலும் முன்னணி நடிகையாகத் திகழும் லட்சுமி, ‘சொந்தக்காரி’ என்னும் படத்திற்காக சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருது, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது என இரண்டு விருதுகளை வென்றார். பின்னர் ‘சலனும்’ என்னும் படத்திற்கு சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருது சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது என இரண்டு முறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.
அதோடு கன்னட மொழியிலும் பல படங்களில் நடித்துள்ள இவர் அங்கும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது, கர்நாடக மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த துணை நடிகைக்கான தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதும்வழங்கப்பட்டது.
வெள்ளித்திரை உடன் நிறுத்தி கொள்ளாமல் சின்னத்திரையிலும் தோன்றியுள்ள லட்சுமி 3 டிவி சீரியல்கள், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த விருது பட்டியலில் மீண்டும் ஒரு விருது சேர்ந்துள்ளது. அதாவது கர்நாடக மாநிலத்தில் வருடந்தோறும் நடைபெறும் கன்னடத் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பிறந்தநாள் நிகழ்ச்சி பெங்களூரில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு திரைப்பட விருதுகளை வழங்கினார். அந்த விழாவில் பிரபல தமிழ் நடிகை லட்சுமிக்கு, ‘ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.
Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!