புதுடெல்லி: 6 – 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷில்டு, ஸ்புட்னிக் வி உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதைத்தவிர்த்து 14 முதல் 18 வயது வரை உள்ளவர்களும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 14 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இதன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பாரத் பயோ டெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு செலுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை தொடர்ந்து 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர்த்து கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு செலுத்தவும் மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. மேலும் சைகோவிட் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.