காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை பிரசாந்த் கிஷோர் நான்கு முறை சந்தித்து காங்கிரஸில் இணைவு தொடர்பாகவும், 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக பொறுப்பாளராக பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிதம்பரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளரும், அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேரா விட்டாலும் அவர் தனது ஆலோசனைகளை வழங்கியதற்காக அவருக்கு நன்றியையும் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு தன்னைவிட தலைமையே தேவை என, கட்சியில் சேர மறுத்த பிரசாந்த் கிஷோர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்குள் புரையோடி உள்ள அடிப்படை கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்க்க முன்வரவேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு தற்போது என்னைவிட தலைமையே தேவை என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
வெளியான முதல் கட்ட தகவலின்படி, பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் இணைப்பதற்கு கட்சியின் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.