புதுடெல்லி:
ராமநவமி, அனுமன் ஜெயந்தியின்போது நாட்டின் சில இடங்களில் வகுப்புவாத மோதல் ஏற்பட்டன.
டெல்லி ஜஹாங்கீர்பூர் பகுதியில் அனுமன் ஜெயந்தி விழாவின் போது மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதேபோல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத்திலும் ராமநவமியின் போது மோதல்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில் ராமநவமி, அனுமன் ஜெயந்தியின்போது டெல்லி ஜஹாங்கீர்பூர் மற்றும் 7 மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல் குறித்து விசாரிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் விஷால் திவாரி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
முன்னாள் நீதிபதி தன்னமைப்பில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
நீதிபதி எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.