கேரளாவின் மலப்புரத்தில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 3 பேர் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
செம்மாடு பகுதியில் சாலையில் இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக பைக்கில் வந்துக்கொண்டிருந்த போது, எதிர்திசையில் சென்டர் லேனைக் கடந்து வேகமாக வந்த மற்றொரு பைக் மீது அவரது பைக் பயங்கரமாக மோதியது.
இதில், இரண்டு பைக்கில் வந்த 3 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.