புதுச்சேரி, :பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புக்கான தேசிய திட்டம் சார்பில், டெங்கு கொசு ஒழிப்பு கள ஆய்வுப் பணி நடந்தது.புதுச்சேரி நலவழித்துறை, பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புக்கான தேசிய திட்டம், கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உழவர்கரை நகராட்சி சார்பில், தீவிர டெங்கு கொசுகளை ஒழிக்கும் கள ஆய்வுப் பணிநடந்தது. கோரிமேடு காமராஜர் நகரில் நடந்த நிகழ்ச்சியை, கோரிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சித்ரா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நகராட்சி இளநிலைப் பொறியாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, வீடு வீடாக சென்று டெங்கு கொசுகள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கப்பட்டது.சுகாதார உதவியாளர்கள் சிவக்குமார், ஜெகநாதன், ஆஷா ஊழியர்கள் விருதாம்பாள், வெற்றிச்செல்வி மற்றும் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Advertisement