கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட திரைப்படங்களுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் திரைப்படம் ‘விக்ரம்’. மாஸாக உருவாகி வரும் இந்தப் படத்தில், கமல்ஹாசன் உடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட், வருகிற ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறது. இந்நிலையில், ‘விக்ரம்’ திரைப்படத்தின் டரெய்லர் வருகிற மே 18-ம் தேதி, கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்படுகிறது. எப்போதும் தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்வதும், புதுமைகளை புகுத்துவதும் கமல்ஹாசனின் வழக்கம். அந்த வகையில் முதல்முறையாக இந்திய படம் ஒன்றின் ட்ரெய்லர் பிரான்சில் நடக்கும் கேன்ஸ் திரைப்படவிழாவில் வெளியிடப்படுகிறது.
பிரான்சில் நடைபெறும் 75-வது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா மே மாதம் 17-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்பட கலைஞர்கள் கலந்துகொள்வர். இதில், கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது.
Glad to announce the launch of Vikram NFTs and Trailer at Cannes Film festival in association with Vistaverse and Lotus Meta Entertainment!
#KamalHaasan #Vikram #VikramFromJune3 #VikraminVistaverse #Cannes2022 #VikraminCannes pic.twitter.com/1Dan1RnQRR— Raaj Kamal Films International (@RKFI) April 25, 2022