டிரம்ப் மீதான டுவிட்டர் தடை நீக்க வாய்ப்பு…பைடன் நிர்வாகம் கூர்ந்து கவனிப்பதாக தகவல்!

டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் இடம் கை மாற உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ள நிலையில், டுவிட்டர் தளத்தில் இருந்து தடை செய்யப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் சேர்க்கப்படுவாரா என அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் கூர்ந்து கவனித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2020 ஆம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடான முறையில் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக டிரம்ப் குற்றம்சாட்டிய நிலையில், அவர் தவறான தகவலை பரப்புவதாக டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் அவரது கணக்கை நீக்கின.

இந்நிலையில், ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்குவது கருத்து சுதந்திரம் தான் என எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ள நிலையில், டிரம்ப் மீதான தடையை எலான் மஸ்க் நீக்குவார் என வெள்ளை மாளிகை கருதுவதாக கூறப்படுகிறது.

அதன் எதிரொலியாக 2024-ல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டிவிட்டர் தளத்தின் தாக்கம் இருக்கும் என அதிபர் ஜோ பைடன் தரப்பினர் கருதுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.