வடகொரிய ராணுவத்தின் 90-வது தொடக்க ஆண்டை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ கல்லறை ஒன்றில் மலர் வைத்து மரியாதை செலுத்தினார்.
வட கொரியாவின் உள்ளூர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், ராணுவ அதிகாரிகள் சகிதம் வந்த கிம் ஜாங் உன், பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அந்த அணுவகுப்பில் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் பலிஸ்டிக் ஏவுகணைகளும் இடம்பெற்றிருந்த நிலையில், அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வட கொரியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் KCNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.