ஜூன் மாதத்திற்குள் ஏற்படப்போகும் மற்றொரு விலை அதிகரிப்பு



எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் ஒரு கிலோ கோழி இறைச்சி மற்றும் முட்டையின்  விலை அதிகரிக்கும் என தேசிய கால்நடை சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமித் மாகமகே தெரிவித்துள்ளார்.

இதன்படி, கோழி இறைச்சி  1500 ரூபாவாகவும் முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கால்நடைத் தீவன விலைகள் மற்றும் இதர செலவுகள் பெருமளவில் அதிகரிப்பதே இதற்குக் காரணமாக இருக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறு மற்றும் நடுத்தர கால்நடை வளர்ப்புத் தொழிலாளர்கள் அந்தத் தொழில்களிலிருந்து விலகிச் செல்கின்றனர் என்றும், அவை தொடர்ந்தால், நாட்டில் ஒரு சில பெரிய அளவிலான தொழில்முனைவோர் மட்டுமே எஞ்சுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.