கொரோனா அதிகரிப்பு குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை..!

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளை மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 2,483 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 1,399பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,62,569 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல இதுவரை  1,87,95,76,423 கோடி  டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லி உள்பட பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், மீண்டும் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டு உள்ளதுடன்,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்துகிறார். நாளை மதியம் 12 மணியளவில் காணொளி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறித்தும், மேலும் எடுக்கப்பட நடவடிக்கை தொடர்பாகவும், குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.  இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.