தீயில் கருகி கணவன், மனைவி பலி; மகள் மருத்துவமனையில் அனுமதி| Dinamalar

மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு அருகே புற்றடியில் வீட்டினுள் தீயில் கருகி ரவீந்திரன் 54, மனைவி உஷா 45, இறந்தனர். மகள் பிளஸ்-2 மாணவி ஸ்ரீதன்யா 17, பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அனக்கரையில் வியாபாரம் செய்து வந்த ரவீந்திரன் அரசு வழங்கிய நிதியில் புற்றடியில் வீடு கட்டுவதால் அருகில் சிறிய அறையில் மனைவி, மகளுடன் வசித்தார்.

நேற்று முன் தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு பலத்த தீக்காயங்களுடன் ஸ்ரீதன்யா வீட்டின் முற்றத்தில் அலறினார். அருகில் வசிப்பவர்கள் சென்று பார்த்தபோது வீட்டினுள் தீப்பற்றிக் கொண்டிருந்தது. தீயை அணைத்தவர்கள் வண்டன்மேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.கட்டப்பனை தீயணைப்புதுறையினர்

தீக்காயம் அடைந்த மூவரையும் மீட்டு கட்டப்பனையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ரவீந்தரன், உஷா உடல் கருகி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்85 சதவிகிதம் தீக்காயங்களுடன் ஸ்ரீதன்யா கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.குடும்ப தகராறு, பணப்பிரச்னையில் சிக்கிய ரவீந்திரன் மனைவியை தீவைத்து எரித்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் அப்போது அறையில் துாங்கி கொண்டிருந்த ஸ்ரீதன்யாவுக்கு தீக்காயம் ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.

அதனை உறுதி செய்யும் வகையில் தற்கொலை தகவலை ரவீந்திரன் வாட்ஸ் அப்பில் பதிவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். கட்டப்பனை டி.எஸ்.பி., நிஷாத் தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.