புதுடெல்லி: ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளதற்கு காரணம் பிரதமர் மோடி என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘புதிய இந்தியாவின் புதிய முழக்கம்; ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் பிரதமர் மோடியின் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ காரணமாக 45 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்க வழிவகுத்துள்ளது. மேலும் 45 கோடி பேர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர்’ என்று குற்றம் சாட்டினார். இந்தியில் வெளியிடப்பட்ட இந்த டுவிட்டில், கடந்த ஐந்தாண்டுகளில் 2.1 கோடி வேலைகள் இழந்துள்ளதாகவும், 45 கோடி பேர் வேலை தேடுவதை நிறுத்திவிட்டதாகவும் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி உள்ளார்.