சர்வதேச வர்த்தக சந்தையில் இந்திய வம்சாவளி பதவியேற்பு| Dinamalar

வாஷிங்டன் : அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக சந்தையின் உதவி செயலராக, இந்திய வம்சாவளியான அருண் வெங்கட்ராமன் நேற்று பொறுப்பேற்றார்.
இந்திய வம்சாவளியான அருண் வெங்கட்ராமன் குடும்பம் இரண்டு தலைமுறைகளாக அமெரிக்காவில் வசிக்கிறது.அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இவர் சர்வதேச வர்த்தக துறையில் பிரபலமான நிபுணராக விளங்குகிறார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றவுடன், நிர்வாகங்களில் பல மாற்றங்களை செய்தார்.

அப்போது சர்வதேச வர்த்தக சந்தையின் உதவி செயலர் மற்றும் அமெரிக்க – வெளிநாட்டு வர்த்தக சேவை துறையின் இயக்குனர் ஜெனரலாக அருணை நியமித்தார். இந்தப் பதவிகளை அருண் வெங்கட்ராமன் நேற்று ஏற்றுக் கொண்டார்.அமெரிக்கா முழுதும் 106 இடங்களில் அமைந்துள்ள அலுவலகங்களில் பணியாற்றும் 1400 ஊழியர்களை அருண் நிர்வகிப்பார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.