திருமலை: திருப்பதி கோவிலுக்கு தங்க நகை தயாரிக்கும் நிறுவனத்தில் இஸ்லாமியர் இடம்பெற்றதால், அந்த நிறவனத்தின் ஒப்பந்தத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான்ம் செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் விதிகளின்படி, கோவில் பணி மற்றும் சில முக்கிய பணிகளில் பணியாற்றுபவர்கள் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும். மற்ற மதத்தினர் பணியாற்ற அனுமதிக்கப்படமாட்டாது. ஆனால் கடந்த காலங்களில், சில மாற்றுமதத்தினரும், திருப்பதி கோவில் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட நிலையில்,பின்னர் அவர்கள் வேறு பணிக்கு மாற்றப்பட்டனர். இது தொடர்பான வழக்கும் நடைபெற்றது.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையானுக்கு தங்க நகை தயாரிக்கும் ஒப்பந்ததாரர் பெற்ற நிறுவனம், நகை தயாரிக்கும் பணியில் ஒரு இஸ்லாமியரை பணி அமர்த்தி இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான், அந்நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கு காரணம் தெரிவித்துள்ள தேவஸ்தானம், தணிக்கை கிராப்ஸ்ட் நிறுவன ஒப்பந்ததாரர் ஆர்.பாபு ஓர் இஸ்லாமியர் என்பதால், இதன்மூலம் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருத்துவதாக தெரிவித்து, ஒப்பந்ததை ரத்து செய்வதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.