பிரித்தானியாவில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் அனைத்தையும் முடிக்காவிட்டால் பாஸ்போர்ட் அலுவலகத்தை தனியார்மயமாக்கிவிடுவேன் என பிரதமர் போரிஸ் ஜான்சன் மிரட்டத்தால் விடுத்துள்ளார்.
பிரித்தானியாவில் மில்லியன் கணக்கான கோடை விடுமுறைகள் தடைபடும் அளவிற்கு விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஆவணங்களை புதுப்பிப்பதில் தாமதம் ஏற்படுவதால் , வரும் மாதங்களில் வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் அதை இழக்க நேரிடும் என்று பிரதமர் திகிலடைந்ததாக கூறப்படுகிறது.
பொதுவாக 10 வாரங்களுக்குள் பூர்த்தி செய்யப்படவேண்டிய standard விண்ணப்பங்களுக்கான கட்டணமாக 75.50 பவுண்டுகள் கட்டவேண்டும். அதுவே விரைவான (fast-track) விண்ணப்பங்களுக்கு பாஸ்போர்ட்டுக்கு 100 பவுண்டுகள் வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்நிலையில், விண்ணப்பங்கள் ஒப்புதல் பெறுவதற்கு தாமதமாவதால், விரைவாக பாஸ்போர்ட்டை பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெரும்பாலான மக்கள் கூடுதல் கட்டங்களை செலுத்தும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
செவ்வாயன்று அமைச்சரவைக்கு அளித்த கருத்துகளில், பிரதமர் ஜான்சன் ஓட்டுநர் மற்றும் வாகன உரிமம் வழங்கும் நிறுவனம் மற்றும் சில அமைப்புகளை தனியார்மயமாக்கலாம் என்று அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் அனைத்தையும் முடிக்காவிட்டால் பாஸ்போர்ட் அலுவலகத்தை தனியார்மயமாக்கிவிடுவேன் என்றும் பிரதமர் மிரட்டத்தால் விடுத்துள்ளார்.
“பொதுத்துறையா, தனியார் துறையா என்பது எனக்கு கவலையில்லை, பொதுமக்களுக்கு மதிப்பு மற்றும் நல்ல சேவையை வழங்குவது மட்டுமே தனது ஒரே அக்கறை” என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
டவுனிங் ஸ்ட்ரீட் தலைமை அதிகாரி ஸ்டீவ் பார்க்லே இந்த வார இறுதியில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.