நடிகர் தனுஷ் தனது மகன் என்று கூறி மதுரை, மேலூர் கதிரேசன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் தனுஷ் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் தனுஷ் தரப்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக கதிரேசன் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், நடிகர் தனுஷ் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடிகர் தனுஷ் எனது மகன் என்று தொடரப்பட்ட வழக்கில், நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்கள் போதிய விவரங்கள் இல்லாத போதும் இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கதிரேசன் தரப்பில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் நடிகர் தனுஷ் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூன் மாதம் தள்ளிவைத்தனர்