பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் பாஷா. இவருக்கு திருமணமாகி சரண்யா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரண்யாவிற்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டது.
அப்பொழுது தான் எலி மருந்து சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.