நடிகர்
தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தனக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். தனுஷின் தனித்துவமான நடிப்பிற்கு என்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதி கூறி வருகின்றனர். தனுஷ் தங்களுடைய மகன்தான் என்று கூறி அவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கதிரேசன் சமீபத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்து விசாரிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலி ஆவணங்கள் தொடர்பான வழக்கில் நடிகர்
தனுஷுக்கு நோட்டீஸ்
அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி இளந்திரையன் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.