அப்பா அம்மாவுக்காக வீஜே தீபிகா செய்த காரியம் : குவியும் வாழ்த்துகள்

வீஜே தீபிகா கடந்த சில நாட்களாக தனது சொந்த ஊரில் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் தனது தாயாருடன் ஜாலியாக சேமியா ஐஸ் சாப்பிட்டுக்கொண்டே அதை குறித்து கதை பேசும் வீடியோவை வெளியிட்டிருந்தார். அது மிகவும் வைரலானது. இந்நிலையில், அவர் தற்போது தனது அப்பா அம்மாவிற்கு ஒரு வீட்டை கட்டி அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

இது குறித்து வீஜே தீபிகா வெளியிட்டுள்ள பதிவில், 'சின்ன வயசில டீச்சர் கேட்கும் போது, அம்மா அப்பாக்கு பெரிய வீடு கட்டிக்குடுப்போம்னு சொல்லுவோம். எல்லா பசங்களுக்கும் அந்த ஆசை இருக்கும். வீடு சின்ன விஷயம் இல்ல அதுல 1000 எமோஷன் இருக்கு. இன்னைக்கு எங்க அம்மா அப்பாக்கு என்னால முடிஞ்ச கிப்ட் கொடுத்திருக்கேன். பாக்குறவங்களுக்கு சின்னதா தெரியலாம். ஆனால், அது எங்களுக்கு கனவு. நிம்மதியா தூங்க இடம் வேணும் நினைச்சவங்களுக்கு இந்த குட்டி வீடு சந்தோஷம் தரும் நம்புறேன்' என பதிவிட்டுள்ளார். அவரது செயலை சக நடிகர்கள், ரசிகர்கள் உட்பட பலரும் பாரட்டி வருகின்றனர். வாழ்க்கையில் இதை விட பெரிய உயரத்திற்கு செல்ல வேண்டும் எனவும் தீபிகாவை வாழ்த்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.