புதுடில்லி : வெளிநாட்டு நன்கொடை பெற்ற விவகாரத்தில் விதிமுறைகளை மீறிய இரண்டு என்.ஜி.ஓ.,க்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது. வெளிநாடுளில் இருந்து நன்கொடை பெற்று செயல்படும் என்.ஜி.ஓ., எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.விதிமுறைகளை மீறும், முறைகேடுகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து வருகிறது.கடந்த 2017 – 21 காலகட்டத்தில் விதிமுறைகளை மீறியதற்காக, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1,900 என்.ஜி.ஓ.,க்களின் உரிமங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்தது.
இந்நிலையில், காமன்வெல்த் நாடுகளில் மனித உரிமை சார்ந்த விவகாரங்களில் செயல்பட்டு வந்த சி.எச்.ஆர்.ஐ., மற்றும் பாலியல் தொழிலாளர்களின் நலன் சார்ந்து பணியாற்றி வந்த ஏ.ஏ.டபிள்யூ.டபிள்யூ., என்ற இரண்டு என்.ஜி.ஓ.,க்கள் விதிமுறைகளை மீறியதற்காக அதன் உரிமங்களை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று ரத்து செய்தது.
புதுடில்லி : வெளிநாட்டு நன்கொடை பெற்ற விவகாரத்தில் விதிமுறைகளை மீறிய இரண்டு என்.ஜி.ஓ.,க்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது.வெளிநாடுளில் இருந்து நன்கொடை பெற்று செயல்படும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.