யானைகள் வேட்டை, வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சி.பி.ஐ. எஸ்.பி. தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ காவல் கண்காணிப்பாளர் நிர்மலாதேவி தலைமையிலான குழுவில் தமிழக முன்னாள் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் உட்பட நான்கு அதிகாரிகள் இடம்பெறுவதாக அறிவித்துள்ளது.
வனக் குற்றம் தொடர்பான 19 வழக்குகளைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றியதுடன், மே 15 முதல் விசாரணையைத் தொடங்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.