பெங்களூரு:அரசு பஸ்களுக்கு, தனியார் பெட்ரோல் ‘பங்க்’குகளில் எரிபொருள் நிரப்புவதால், மாதம் 22.50 கோடி ரூபாய் லாபம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் அரசு போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன. பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்க கூட முடியாத நிலை நிலவுகிறது.அரசு போக்குவரத்து கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக தனிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு டிப்போக்களில் இருக்கும் பெட்ரோல் பங்குகளுக்கு பதிலாக, தனியார் பெட்ரோல் பங்குகளில், டிரைவர்கள் எரிபொருள் நிரப்புகின்றனர்.இவ்வாறு செய்வதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்துக்கு, மாதத்துக்கு 22.50 கோடி ரூபாய் மீதமாகிறது.
இதனால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு லாபம் கிடைக்கிறது; இதன்மூலம் போக்குவரத்து கழகம் நஷ்டத்திலிருந்து மீண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தனியார் பெட்ரோல் ‘பங்க்’குகளில் சில்லரை விலைக்கே, பஸ்களில் டீசல் போட முடிவு செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement