புதுடில்லி: டாடாவுக்கு சொந்தமான ஏர் இந்தியா அதன் துணை நிறுவனமான ஏர் ஏசியா இந்தியாவை இணைக்க முடிவு செய்துள்ளது.
ஜெ.ஆர்.டி. டாடாவிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனம் 1953ல் தேசியமயமாக்கப்பட்டு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. 69 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி 27ல் டாடா சன்ஸ் நிறுவனம் மீண்டும் முறையாக ஏர் இந்தியாவை திரும்பப் பெற்றது.
டாடா குழுமத்தின் ஏர் ஏசியா இந்தியா குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருகிறது. தற்போது ஏர் ஏசியா இந்தியாவில் டாடா சன்ஸ் 83.67 சதவீத பங்குகளையும், 16.33 சதவீதம் மலேசியாவின் ஏர் ஏசியா குழுமத்தைச் சேர்ந்த ஏர் ஏசியா இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டெட் நிறுவனத்திற்கும் சொந்தமானது.
தற்போது டாடா சன்ஸ் 4 விமான நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியை துவங்கியுள்ளது. இதன் மூலமாக ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா, மற்றும் ஏர் இந்தியா ஏர்போர்ட் சஸ்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் ஒரே அலுவலகத்தி்ல அதன் சேவையை வழங்க உள்ளன.
இதற்காக ஹரியானாவின் குருகிராமில் 70,000 சதுர அடியில் ஓர் இடத்தை குத்தகைக்கு தேர்வு செய்யவுள்ளதாக தெரிகிறது. பல்வேறு பிரிவுகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதன் மூலமாக சிறந்த சேவையை வழங்க உள்ளது.
Advertisement