தஞ்சை தேர்விழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் தஞ்சாவூரின் நடந்த அசம்பாவிதம் மிகுந்த வேதனையளிக்கிறது. படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள்.
விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்.. 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதிகரிப்பு- கொரோனா தினசரி பாதிப்பு 2,927 ஆக உயர்வு