பிரான்சில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இம்மானுவேல் மக்ரோன் மீது தக்காளி வீசப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிரான்சில் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), இன்று முதல் முறையாக பொது வெளியில் மக்கள் சந்தித்துள்ளார்.
தனது முதல் தேர்தல் வெற்றிக்கான நடைபயணமாக பாரிஸின் வடமேற்கில், செர்ஜியில் உள்ள சந்தையில் வாக்காளர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது, அவர் மீது குறிவைத்து செர்ரி தக்காளிகள் வீசப்பட்டது.
மக்ரோனுக்கு அதிர்ஷ்டவசமாக, கூட்டத்திலிருந்து வீசப்பட்ட தக்காளி இலக்கை அடையவில்லை. மக்ரோனின் மெய்க்காப்பாளர்கள் குழு உடனடியாக குடையை விரித்து கொண்டு அவரைப் பாதுகாக்க தயாராக இருந்தனர்.
சிகரெட் பற்றவைத்ததால் விபத்துக்குள்ளான விமானம்! 6 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை
Emmanuel Macron ciblé par un jet de tomates lors de son déplacement à Cergy pic.twitter.com/3J0hXIZSRP
— BFMTV (@BFMTV) April 27, 2022
பொதுமக்களுடனான சந்திப்பில் மக்ரோன் எதிர்ப்பாளர்களால் குறிவைக்கப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த அக்டோபரில் லியோனுக்கு பயன் செய்தபோது, மக்ரோனை நோக்கி முட்டை வீசப்பட்டது. அதேபோல், சில மாதங்களுக்கு முன்பு, மக்ரோனை ஒருவர் அறைந்தார், பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இம்மானுவேல் மக்ரோன் தனது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரான்சை ஒன்றிணைப்பதாக சபதம் செய்தார். ஆனால் அனைத்து வாக்காளர்களும் அவருக்கு ஆதரவு அளிக்க தயாராக இல்லை என்று இந்த தக்காளி வீச்சு சம்பவத்தில் தெரிகிறது.
தேர்தலில் வெற்றி பெற்ற மேக்ரானுக்கு புடின் வாழ்த்து: என்ன கூறியிருக்கிறார் பாருங்கள்