செங்கல்பட்டு மாவட்டம் திருவாஞ்சேரியில் பட்டா மாற்றம் செய்வதற்கு லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் திருவாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பித்ததாகவும், அதற்கு விஏஓ தீபா மற்றும் உதவியாளர் தனலட்சுமி 13 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத நபர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்ததையடுத்து, அவர்களின் அறிவுறுத்தலின்படி ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுத்தபோது, மறைந்திருந்த அதிகாரிகள் தீபா மற்றும் தனலட்சுமியை கையும் களவுமாக கைது செய்தனர்.