கேரளாவில் கார் ஓட்டுநர் ஒருவருக்கு சரியாக ஹெல்மெட் அணியாத குற்றத்திற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அஜித் என்பவர் மாருதி ஆல்டோ கார் உரிமையாளராக உள்ளார். ஆனால் அவர் ஹெல்மெட் அணியாத காரணம்காட்டி போக்குவரத்து காவக்துறையினர் ரூ.500 அபராதம் விதித்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. “தலையில் பாதுகாப்பாகக் கட்டப்படாத தலைக்கவசத்தை அணிந்துகொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதித்ததற்காக” அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவரிடம் ரசீது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவரிடம் இரு சக்கர வாகனமே இல்லை என்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
விசாரித்தபோது கேமரா காட்சிப்பதிவின் அடிப்படையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது தெரிய வந்தது. காட்சிகளை ஆராய்ந்தபோது டிசம்பர் 7, 2021 அன்று ஹெல்மெட் அணியாமல் பைக்கில் இரண்டு பேர் பைக்கில் செல்வதைக் காட்டுகிறது. பைக்கின் பதிவு எண்ணின் கடைசி இரு இலக்கங்கள் சரியாக தெரியாத நிலையில் அந்த இரு இலக்கங்களை “77” என்று முடிவு செய்யப்ப்பட்டு அஜித்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இரு இலக்கங்கள் “11” என்று கூறும் அஜித் “தான் அபராதம் செலுத்தப்போவதில்லை. மோட்டார் வாகன அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM